திரைக்கதை மன்னர் பாக்யராஜ் அவர்கள் கோவை வரும்போதெல்லாம் ,என்னைச் சந்திக்கும் போது ஆதங்கத்தோடு சொல்கிற வார்த்தைகள் இது.
"என்னங்க... நீங்க கோயம்புத்தூர்ல உட்கார்ந்துட்டு.... ?
சென்னைக்கு வாங்க, உங்க கிட்ட இருக்கிற திறமைக்கு அங்கே வந்தா நிறைய பிரபலங்களோட அறிமுகங்கள் கிடைக்கும். திரைப்படத் துறையில நிறைய விழாக்கள்ல நீங்க கலந்துக்கலாம். இதன் மூலமா உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும்.பேரும், புகழும் இப்ப இருக்கிறதை விட நாலு மடங்கு அதிகமாகும்"
என்று அடிக்கடி சொல்வார்.
அதற்கு நான் "கோயம்புத்தூரை விட சென்னையிலிருந்தா எனக்கு நாலு மடங்கு பேரும் புகழும் பணமும் கிடைக்கும்ங்கிறது.
உண்மைதான் .ஆனா இங்கே இருக்கிற நிம்மதியும், சந்தோஷமும், அங்கே எனக்கு கிடைக்குமா? எதுவாக இருந்தாலும் இங்கிருந்தே சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குன்னு"சொல்வேன்.
அப்படி அவர் வற்புறுத்தியதெல்லாம், ஒரு காலகட்டம் வரைக்கும்தான். அதற்குப் பிறகு ஒருநாள்
என்னைப் பார்த்த போது "ராஜேஷ் குமார்.. நீங்க எடுத்திருக்கிற முடிவு ரொம்ப நல்ல முடிவு. கோயம்புத்தூர்லயே இருங்க. அதுதான் நல்லது" என்று சொன்னார்.
எவ்வளவு பேரும் புகழும் பணமும் கிடைச்சா என்ன சொந்த ஊர் மாதிரி வருமா ?
இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே....!
எங்களோட கோயம்புத்தூர்க்கு 219 வது பொறந்த நாளுங்க...
- எழுத்தாளர் ராஜேஷ் குமார்