Feb-23 இயக்குனர் ஆர் சி சக்தி நினைவு நாள்...
‘பொற்சிலை’ எனும் திரைப்படம். இதில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தது சக்திக்கு கிடைத்தது. இங்குதான் பிரபல நடன இயக்குநரான தங்கப்பன் மாஸ்டரின் நட்பு கிடைத்தது. அப்போது தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த கமல்ஹாசனின் நட்பும் கிடைத்தது.
இருவரும் இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்து எல்டாம்ஸ் ரோடு கமலின் வீட்டு வாசலிலும் அருகில் உள்ள சாம்கோ ஹோட்டலிலும் தேநீர் அருந்தியபடி, விடிய விடிய தாங்கள் பார்த்த சினிமாவைப் பிரித்து மேய்வார்கள். நான்கைந்து தேநீருக்குப் பிறகுதான் விடிந்ததையே உணருவார்கள். அந்த அளவுக்கு நல்ல சினிமா மீதும் தமிழ் சினிமா பயணிக்கும் பாதையை மடைமாற்றிவிடவேண்டும் என்பதன் மீதும் பேரார்வம் இருந்தது இருவருக்குள்ளேயும்!
அப்போது கமல், மலையாளப் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். கேரளத்தில் இருந்து சென்னைக்கு வந்தால், ஆர்.சி.சக்தியுடன் தான் அவரின் பொழுதுகள் கழியும். கமலுடன் பேசிக்கொண்டே கேரளாவுக்குச் சென்று, கமல் படப்பிடிப்புக்குச் செல்ல, ஆர்.சி.சக்தி, ரயில் பிடித்து சென்னைக்குத் திரும்பியதெல்லாம் பலமுறை நடந்திருக்கிறது.
இயக்குநர் மகேந்திரன், சந்தானபாரதி, பி.சி.ஸ்ரீராம், மணி ரத்னம், சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மனோபாலா என்று கமலுக்கு மட்டுமின்றி கமலின் ஒட்டுமொத்தக் குடும்பத்தாருக்கும் பழக்கமும் நெருக்கமும் கொண்டவர்கள் பட்டியல் மிகப்பெரிய நீளம். அந்தப் பட்டியலில் ஆர்.சி.சக்திக்கு தனியிடம் உண்டு. ’’அவங்க மாடிக்குப் போய் பேச ஆரம்பிச்சிட்டாங்களா? சோறுதண்ணி கூட ஞாபகம் இருக்காது. அவங்களுக்கு சாப்பாடைக் கொண்டு கொடுங்க’’ என்று கமலின் சகோதரர் சாருஹாசன் சொல்ல, கமலின் மன்னி உடனே கொண்டுகொடுப்பார். எல்டாம்ஸ் ரோடு கமல் வீட்டின் மாடியில், பல கதைகளை உருவாக்கினார்கள். அப்படி கமலும் ஆர்.சி.சக்தியும் திரைக்கதை, வசனங்களை எழுத, ‘உணர்ச்சிகள்’ என்கிற படத்தை எழுபதுகளில் இயக்கினார் ஆர்.சி.சக்தி.
இந்தப் படம் ஓடவில்லைதான். ஆனால், பார்த்தவர்கள் அனைவரும் படத்தின் கதையை உணர்ந்து ‘உணர்ச்சிகள்’ படத்தைக் கொண்டாடினார்கள். பத்திரிகைகளும் ஆர்.சி.சக்தியையும் கமலையும் பாராட்டித் தள்ளின. கமலும் ஆர்.சி.சக்தியும் உணர்வுபூர்வமாகக் கலந்து, ‘உணர்ச்சிகள்’ மாதிரி படம் கொடுக்க நினைத்து சாதித்தும் காட்டினார்கள். நடிப்பைக் கடந்து நடனம், நடிப்பையும் நடனத்தையும் கடந்து திரைக்கதை, வசனம், உதவி இயக்கம் என்று முழுமூச்சாக கமல் இறங்கி வேலை பார்த்த முதல் படம் ‘உணர்ச்சிகள்’ திரைப்படமாகத்தான் இருக்கும்.
இப்படியாகத்தான் ஆர்.சி.சக்தியிடம் இருந்து வந்த படைப்புகள், ஆகச்சிறந்ததாக வெளிப்பட்டன. யாரை வைத்து படம் இயக்கினாலும் அந்த மொத்தக்கதையையும் கமலிடம் சொல்லிவிடுவார் ஆர்.சி.சக்தி. இருவரும் விவாதிப்பார்கள்.
ஸ்ரீதேவியை கதையின் ஆதாரமாக வைத்து ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்றொரு படத்தை இயக்கினார் சக்தி. பாடல்களும் வேறொரு நிறத்தில், குணத்தில் இருந்தன. கதையும் அப்படித்தான் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் அப்போதே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் நண்பருக்காக, இந்தப் படத்தில் கமல், கெளரவத் தோற்றத்தில், சைக்கிள் கடை வைத்திருப்பவராக நடித்தார். ஸ்ரீதேவிதான் நாயகி என்றாலும் கமலுக்கு மனைவியாக நடிகை சத்தியப்ரியா நடித்தார்.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஜினியை நெருங்கவே பலரும் யோசித்தார்கள். ஒரு கதை தயார் செய்து வைத்திருந்த சக்தி, வழக்கம் போல் கமலிடம் பகிர்ந்துகொண்டார். அவரும் கதையில் சில மாற்றங்களைச் சொன்னார். இன்னும் மெருகேற்றினார் ஆர்.சி.சக்தி. ’தர்மயுத்தம்’ என்கிற அந்தப் படத்தை இன்றைக்கும் நம்மால் மறக்கமுடியாது. அப்படியொரு படம் வருவதற்கும் ஆர்.சி.சக்திக்கும் ரஜினிக்குமான தொடர்புக்கும் வழி வகுத்துக் கொடுத்தார் கமல்
அன்னை வேளாங்கண்ணி படத்தின் டைட்டிலில், ‘உதவி இயக்குநர்கள் - ஆர்.சி.சக்தி, கமலஹாசன்’ என்று ஒரே கார்டாக வந்ததை தியேட்டரில் இருவரும் பார்த்துவிட்டு, விசிலடித்து, கரவொலி எழுப்பி, ஆரத்தழுவிக் கொண்டனர். கமலின் வெற்றியை சக்தி கொண்டாடுவான். சக்தி படத்துக்கு பாராட்டு கிடைத்தால், கமல் அதை நான்கு நாட்களுக்குச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வான். அப்படியொரு பந்தமும் நட்பும் அவர்களுக்குள்’’ என்று சாருஹாசன் வியந்து சிலாகித்திருக்கிறார்.
’உணர்ச்சிகள்’ படம் பெரிதாகப் போகாத நிலையில், மலையாளத் தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, ஆர்.சி.சக்தியை அறிமுகப்படுத்த, ‘ராசலீலை’ என்று மலையாளத்தில் வெளியானது. தமிழகத்திலும் மலையாள மொழியிலேயே திரையிடப்பட்டு, நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தபோது, அங்கே நெகிழ்ந்தார் ஆர்.சி.சக்தி. மகிழ்ந்தார் கமல்!
’
விஜயகாந்தும் கமலும் சேர்ந்து நடித்ததே இல்லை என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால், ‘மனக்கணக்கு’ படத்தில், விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் கேரக்டரிலும் கமல், இயக்குநர் கதாபாத்திரத்திலும் இணைந்து நடித்தார்கள். அப்படி இணைத்தவர் ஆர்.சி.சக்தி.
’’சக்தியண்ணன்... அப்படித்தான் நான் கூப்பிடுவேன். எனக்கும் அவருக்குமான நட்பையும் உறவையும் சொல்லிப் புரியவைக்கமுடியாது. என் குடும்பத்தில் சக்தியண்ணன் ஒருத்தர். அவர் குடும்பத்தில் நானும் உண்டு. அவ்ளோதான் சொல்லமுடியும். சினிமாவின் தரத்தை உயர்த்தவேண்டும் என்கிற கோபம் இருவருக்குமே உண்டு. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள்தான் சக்தியண்ணனின் படங்களும் என்னுடைய சில படங்களும்! இன்னும் சொல்லப்போனால், சக்தியண்ணன் என்னெல்லாம் சினிமால பண்ணணும்னு நினைச்சாரோ, அதில் பல விஷயங்களை நிறைவேற்றிவிட்டேன் என்பதுதான் எங்கள் தோழமைக்கான அடையாளம்.
அவர் எனக்கு நேரெதிர். நான் அவ்வளவு சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படமாட்டேன். ஆனால், உணர்ச்சியைக் கொட்டுவதில் சக்தியண்ணனை நடிகர்கள் கூட ஜெயித்துவிடமுடியாது. ஒரு காட்சியில் அழவேண்டும் என்றாலோ, கோபமாகப் பேசவேண்டும் என்றாலோ, சக்தியண்ணன் காட்சியை அழுதுகொண்டே விளக்குவார். நாம் நடித்து முடித்தாலும் கூட ‘கட்’ என்பதை அழுதுகொண்டே சொல்லுவார். அப்படியே கதையுடனும் காட்சிகளுடனும் ஒன்றிப்போகிற மெல்லிய மனசு அவருக்கு’’ என்று ஆர்.சி.சக்தியைப் பற்றி மேடையில் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.
உடல்நிலை குன்றிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆர்.சி.சக்தியைப் பார்க்க கமல் சென்றார். ‘’தைரியமா இருங்கண்ணே. ரொம்ப உணர்ச்சிவசப்படாம இருங்கண்ணே’’ என்று ஒருமணி நேரம் கமல் பேசிவிட்டு, கிளம்பும் போது, ஆர்.சி.சக்தியின் தலையணைக்குக் கீழே ‘கவர்’ ஒன்றை வைத்தார். அந்தக் கவரை ஆர்.சி.சக்தி எடுத்துப் பிரித்துப் பார்த்தார். இன்னும் உணர்ச்சிவசப்பட்டு சின்னக்குழந்தை போல் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் சக்தி.
ஆஸ்பத்திரியில் ஆர்.சி.சக்தியின் மொத்தச் சிகிச்சைக்குமான செலவுத்தொகையைத் தந்திருந்தார் கமல். அதுதான் நட்பு; ஆர்.சி.சக்தி, தமிழ் சினிமாவை வளர்க்கும் வெறியுடன் இருந்த கலைஞனுக்குக் கிடைத்த கமல் எனும் சொத்து!.ஜி
2015-ம் ஆண்டு, பிப்ரவரி 23-ம் தேதி மறைந்தார்.