இசைஞானியுடன் “செவ்வந்தி பூ முடிச்சு” என்று ஆரம்பித்த பாடல் இவருடைய இசை பயணத்தில் “ஆட்டுகுட்டி முட்டையிட்டு” என ஒரே படத்தில் இரண்டு தங்க முட்டைகளாகவே இசைஞானியால் பிரசவிக்கப்பட்டது. கோவில் மணி ஓசை தனை பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தாலும் அந்த படத்தில் இடம்பெறாத ஜானகி அம்மாவின் ஆலாபனை ஆராதனையில் தொடங்கும் “மலர்களே நாதஸ்வரங்கள்” என்ற பாடல் காலத்தால் அழியாத பாடலாக அனைவரையும் முணுமுணுக்க வைத்தது.
பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடல் ரஜினி ரசிகர்களின் அறிவிக்கப்படாத தேசிய கீதமாக மாறியதும், ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை என ஆட்டம் போட வைத்ததும் இவரின் சிறப்பம்சமாக அமையப் பெற்று, ஒரு கட்டத்தில் தர்ம யுத்தம், மாவீரன், அதிசய பிறவி போன்ற ரஜினியின் படங்களில் அனைத்து பாடல்களும் இவர் பாடிய சிறப்பையும் அந்தஸ்தையும் பெற்று தந்தது. ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு இன்றும் அண்ணன் தங்கச்சி உறவின் பாலமாக பாராட்டபட்டு கொண்டே வருகிறது..
பாடகர், நடிகர் என்பதை தாண்டி சாமந்திபூ, பாக்கு வெத்தலை போன்ற ஒரு சில படங்களுக்கு இசை அமைத்ததோடில்லாமல் 1991ல் வெளியான நீ சிரித்தால் தீபாவளி என்ற படத்தின் மூலம் டைரக்டராகவும் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. சாமந்தி பூ படத்தில் ஜானகிமா குரலில் இவர் இசை அமைத்த “கனவுகளே ஊர்கோலம் எங்கே” என்ற பாடல் இன்றும் காலத்தால் அழியாத யாரும் அதிகம் அறியப்படாத பாடல் என்பதை தாண்டி இந்த படத்தில் நடித்த நடிகை ஷோபா அவர்களின் இறுதி ஊர்வல அஞ்சலி பாடலாக அமைந்தது காலத்தின் கோலம் என்பதை தவிர சொல்ல வேறு வார்த்தை இல்லை.
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி கண்மணி, பாட்டுக்கு ஜோடியா போட்டிக்கு வாரியா, என்னமா கண்ணு சவுக்கியமா, வா வா வாத்தியாரே வா, கூடலூரு குண்டு மல்லி, படகோட்டும் பட்டம்மா பாட்டொன்னு என போட்டி போட்டு ஆட வைத்தது…
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு, கோடை கால காற்றே குளிர், ஆழக்கடலில் தேடிய முத்து, தங்கசங்கிலி மின்னும், மலர்களிலே ஆராதனை, பூவே இளைய பூவே, ஆயிரம் மலர்களே மலருங்கள்... என மயிலிறகால் மென்மையாக மனதை வருடியதும்...
அள்ளி தந்த பூமி அன்னையல்லவா, வா வா வசந்தமே, பெத்து எடுத்தவ தான் என்னையும், ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் என மனதை பிழிந்த கீதங்களாகட்டும்...
வெள்ளை மனம் உள்ள மச்சான், பூங்காற்று திரும்புமா, யார் பாடும் பாடல் என்றாலும் என ஜோடிக்குரலுடன் பரிதவிக்க வைப்பதாகட்டும்...
வான் மேகங்களே வாழ்த்துங்கள், ஆகாய கங்கை பூந்தேன் மலர், இந்த மின்மினிக்கு கண்ணில், பேர் வெச்சாலும் வெக்காம போனாலும், குத்தால குயிலே குத்தால குயிலே உக்காந்து, சொல்லி அடிப்பேனடி அடிச்சேனின்னா, கட்டி வெச்சிக்கோ எந்தன், நீ போகும் பாதையில் மனசு போகுதே என காதல் டூயட்டில் கதிகலங்க வைத்தது...
காமாட்சி...
இங்க இருக்கிற பூவெல்லாம் பாக்கும் போது..
எனக்கு உன் ஞாபகமாவே இருக்கு...
இந்த லெட்டர் உனக்கு ஒரு வித்தியாசமான லெட்டராவே இருக்கும்.
பின்குறிப்பு: தம்பி ராமகிருஷ்ணா... கூச்சபடாம மற்றவைகளையும் படித்து காட்டவும்...
இந்த வசனத்தை மலேசியா வாசுதேவன் பேசுவதை கேட்டு கொண்டாடி குதூகலித்து தீர்த்த ஒரு ரசிக பட்டாளமே அன்றைய காலகட்டங்களில் அவருக்கு இருந்தது....
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே, சுக ராகமே சுக போகமே என பாடகர் C.S.ஜெயராமன் குரலை நினைவுபடுத்துவதாகட்டும்... காதல் வந்திருச்சு ஆசையில், மாமாவுக்கு குடுமா குடுமா என அந்த படங்களில் நடித்த கமலின் கதாபாத்திரமாக மாறி பாடியதாகட்டும், ஒவ்வொரு ஏப்ரல் மாத மாரியம்மன் கோயில் விசேசத்தில் முதல் பாடலாக “மாரியம்மா மாரியம்மா திரிசூலியம்மா” என இவர் பாடிய சொக்க வைத்து சுண்டி இழுத்து கட்டி போட்டு குதூகலித்து கலாட்டா செய்யும் இது போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைபெற்று வாழ்ந்து கொண்டு தான் வருகிறார் என்பதே அவருக்கு நாம் செலுத்தும் 13ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி. (20/2/2011)