Search found 1 match for FilmicIndia

மாமன்னன் திரைப்பட விமர்சனம்!

சிம்பிளா சொல்லனும்னா....
ஹீரோ உதயநிதி வர்ற காட்சிகளை மட்டும் தூக்கிட்டோம்னா இது ஒரு சிறந்த அரசியல் படம்... அல்லது வில்லன் பகத்பாசில் வர்ற காட்சிகளை மட்டும் தூக்கிட்டோம்னா இது ஒரு சிறந்த சமத்துவம் பேசுற படம்! ரெண்டும் இருந்துச்சுன்னா மாமன்னன் ஒரு குப்பைதான். உதயநிதிக்கு இது கடைசி படம்ங்கறதால கொஞ்சம் எக்ஸ்ட்ரா புரமோஷன் பண்றாங்க. ஆனா இது உதயநிதியோட சினிமா வரலாற்றையே சிதைத்த படம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்! தயவுசெய்து இன்னொரு படம் பண்ணிடுங்க உதயநிதி! இது எங்க டீமோட அன்பான Request.

சரி நாம விமர்சனத்துக்குள்ள போவோம்... பொதுவா நாங்க இப்படி சினிமா விமர்சனம் எல்லாம் பண்றதே இல்ல. But உதயநிதிக்காக இந்த குறும்பு விமர்சனம்... 😂

அதாவது, ஹீரோ உதயநிதி தன்னுடைய அப்பாவான வடிவேலுவுடன் ஒரே வீட்ல இருந்துகிட்டு 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்... ஏன்னா? உதயநிதி சிறுவனா இருக்கும்போது தனது நண்பர்களுடன் ஒரு கோவில் கிணற்றில் குதித்து விளையாடுகிறார். அவர்களை சிலர் கல்லால் அடிக்கின்றனர். அதில் உதயநிதியின் நண்பர்கள் இறந்து விடுகின்றனர். உதயநிதி மட்டும் எப்படியோ தப்பித்து வந்து விடுகிறார். அங்கேயே சொதப்பல் ஸ்டார்ட் ஆகிடுச்சு...

ஆனால், அரசியல் தொடர்பில் இருக்கும் தன் தந்தை வடிவேலு அந்த சம்பவத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்காக அவருடன் பேசாமல் இருப்பதாக திரைக்கதை அமைத்துள்ளனர்... But கதைக்கும், திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்னு மாரிசெல்வராஜ் க்கு இன்னும் சரியா புரியலேன்னுதான் தோனுது... ஏன்னா?  கொலை செய்யப்பட்ட பசங்களுக்கு நியாயம் கேக்குறதுக்காக வடிவேலு ஒரு கட்சித் தலைவரை கூட்டிகிட்டு ஊருக்குள்ள வரும்போது பாதியிலயே காரை நிறுத்தி ஊருக்குள்ள பெருசா கலவரம் நடந்துட்டு இருக்குதுனு சொல்றாங்க. ஆனா யாரு கலவரம் பண்ணது? அதுக்கப்புறம் அந்த பிரச்சினை என்ன ஆச்சுன்னு காட்டவே இல்லை.

அப்புறம்... 15 வருஷம் தன்னோட தந்தையிடம் பேசாமல் இருந்த ஹீரோ, திடீர்னு அப்பா மேல் அக்கறைப்பட்டு இன்னொருத்தன் வீட்டில் அவரை உக்கார வச்சி பேசலேன்னு கோபப்படுற காமெடி எல்லாம் சுட்டி டிவில கூட காட்டமாட்டாங்க. என்னய்யா திரைக்கதை இது?... உதயநிதி ஹீரோவா? இல்ல காமெடியனா? 😂😂

நெறையா பேரு மாமன்னன் படத்தை ஜாதியைப் பற்றி பேசுற படம்னு சொல்றாங்க. ஆனா ஹீரோ உதயநிதியைத் தவிர வேறு யாருமே ஜாதியைக் குறிப்பிட்டு எந்த பிரச்சனையும் பண்ணவே இல்ல. ஹீரோதான் தூண்டி விட்டுகிட்டே இருக்காரு... பகத்பாசில் வீட்ல நடக்குற இடைவேளை சீன்லகூட வடிவேலுவை அன்பா அண்ணன்னுதான் சொல்றாங்க... உதயநிதியையும் உட்காரத்தான் சொல்றாங்க. ஆனா தேவையில்லாம வடிவேலுவை சேர்ல உட்காரச் சொல்லி பிரச்சினையை உருவாக்குறதே உதயநிதிதான்... இதுக்கு பேரு ஹீரோயிஸமா?

அதாவது, கீர்த்திசுரேஷ் நடத்துற ஸ்கூலை உடைச்சதுக்கும், பதிலுக்கு பகத்பாசில் அண்ணன் நடத்துற ஸ்கூலை உடைச்சதுக்கும் சமாதானம் பேசத்தான் பகத்பாசில் வடிவேலு மற்றும் உதயநிதியை வீட்டுக்கு வரச் சொல்றாரு... நம்ம கட்சி MLA தானே இதை ஏன் பெருசு பண்ணனும் பேசித் தீர்த்துக்கலாம்னு தெளிவா பேசுற மாதிரி டையலாக் வச்சிருக்காங்க. ஆனா சமாதானம் பேசப்போன இடத்துல அப்பாவுக்கு மரியாதை குடுக்கலேன்னு மகன் அலப்பரை பன்றதும், சேர்ல உட்கார்ந்த வடிவேலு உடனே வில்லனை போடா வாடான்னு பேசுறதும் ஓவர் இமேஜினேஷன் தான்... கதையோட மேட்ச் ஆகல... ஆனா வடிவேலு சேர்ல உட்காரும் போதெல்லாம் தியேட்டர்ல விசில் பறக்குது... அந்த விசில் தியேட்டர் சேர்ல இருந்து வந்ததா? இல்ல ஓரமா இருந்து வந்ததானு தெரியல... ஏன்யா சேர்ல உட்கார்றது அவ்வளவு பெரிய விஷயமாய்யா? But அந்த அளவுக்கு வடிவேலுவை யாரும் கொடுமைப்படுத்துற மாதிரி சீன் இல்லையே... எதுக்காக விசில் அடிச்சிருப்பாய்ங்க???? 😂😂

அதுமட்டுமில்லாம வில்லன் பகத்பாசில் மேல எந்தத் தப்புமே இல்லாத மாதிரிதான் திரைக்கதை அமைச்சிருக்காங்க. அப்புறம் எதுக்காக ஹீரோ அவருகிட்ட வீன் வம்புக்கு போறாருன்னும் புரியவே மாட்டேங்குது... சின்ன வயசுல தன்னோட நண்பர்களை கல்லால அடிச்சிக் கொலை பண்ணவங்களை பழி வாங்குறதை விட்டுட்டு, தன்னோட அப்பாவுக்கு மரியாதை குடுக்குறாங்களா இல்லையானு போற இடத்துல எல்லாம் அலப்பரை பன்றது செம்ம காமெடியா இருக்கு. ஆனா, கடைசி வரைக்கும் வடிவேலு பேச்சை உதயநிதி கேட்கவே இல்லை... வேண்டாம்டா... வேணாம்டா... அப்பா பேச்சை கேளுடா... அப்படின்னு ஒவ்வொரு சீன்லயும் வடிவேலு கெஞ்சிகிட்டே இருக்காரு ஆனா உதயநிதி அவரு இஷ்டத்துக்குதான் பண்ணிட்டு இருக்காரு. மகனே அப்பாவுக்கு மரியாதை குடுக்கலேன்னா அடுத்தவன் எப்படிய்யா மரியாதை குடுப்பான்? என்னய்யா ஸ்கிரீன்பிளே இது? கேட்டா வடிவேலு அடிமையா இருந்தாரு... ஹீரோ புரட்சி பண்றாருனு சொல்வாய்ங்க... ஆனா அடிமையா இருந்த வடிவேலுவாச்சும் MLA-வா  இருந்தாரு... கடைசில அவைத்தலைவர் ஆகிட்டாரு. ஆனா புரட்சி பண்ற உதயநிதி என்ன ஆனார்னே காட்டல... உதயநிதிகூட பண்ணி மேய்க்கப் போயி கல்லடிபட்டு செத்துப்போன நண்பர்கள் ரொம்ப பாவம் பண்ணிருக்காங்க போலருக்கு. அவங்களை யாரும் கண்டுக்கவே இல்ல...

ஒருவேளை தன் கண்ணு முன்னாடியே தன்னோட நண்பர்கள் கொலை செய்யப்பட்டதால அந்த ஜாதியையே வெறுக்குற மனநிலையில உதயநிதி இருக்குற மாதிரி ஸ்கிரீன்பிளே பண்ணிருந்தா, கீர்த்திசுரேஷை மட்டும் எதுக்கு லவ் பண்ணனும்? அந்தப் பொண்ணு உயர்ஜாதியைச் சேர்ந்தவர்னு ஏன் நெறையா சீன்ல மென்சன் பண்ணிருக்காங்கனும் புரியல...

அப்புறம்..., தேர்தல் பிரச்சாரத்துக்கு ஊருக்குள்ள வரவிடாம பல காரணங்களை சொல்லி வில்லன் குரூப் தடுக்கும்போது, நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்னு வீடியோல பேசித்தான் வடிவேலு ஓட்டு கேக்குறாரு... ஆனா யாரு ஓட்டு போட்டது? எப்படி ‌ஜெயிக்கிறாருன்னு எந்த விவரமும் காட்டல... உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த கீர்த்திசுரேஷ் மற்றும் சில இளைஞர்கள் தான் உதயநிதியையும், வடிவேலுவையும் திரும்ப ஊருக்குள்ள கூட்டிகிட்டு போறாங்க... அப்புறம் என்ன மயிருக்கு ஜாதியைச் சொல்லி ஓட்டு கேக்குற மாதிரி சீன் வைக்கனும்னு புரியல... மாரிசெல்வராஜ் தன்னோட மனசுல இருந்த தீண்டாமை குறித்த ஆதங்கத்தை மட்டுமே சொல்ல முயற்சி பண்ணிருக்காரே தவிர, இது ஒரு சினிமாங்கற கான்செப்ட்டையே மறந்துவிட்டார் போலருக்கு... உதயநிதி வர்ற சீன் எல்லாமே வாலின்டரா திணிச்சிருக்காங்க. ஆனா வடிவேலு, கீர்த்திசுரேஷ், பகத்பாசில் போர்ஷன் எல்லாம் செம்ம மாஸ்!!

ஒரு சீன்ல காருக்குள்ள உட்கார்ந்து துப்பாக்கியைக் காட்டி வடிவேலு மிரட்டும்போது அசால்ட்டா மாஸ் காட்டிருக்காரு பகத்பாசில்... அந்த சீனும் மாரிசெல்வராஜ் தான் பண்ணாரா இல்ல அசிஸ்டன்ட் டைரக்டர்கள் யாராச்சும் பண்ணாங்களான்னு டவுட்டா இருக்கு... But அந்த சீன் ஹீரோ உதயநிதிக்கு வச்சிருக்கனும்... ஏன் வில்லனுக்கு வச்சாங்கனும் புரியல...

அப்புறம்... உதயநிதியோட‌ ஆசான் ஒரு பஞ்ச் டயலாக் சொல்றாரு. "உன் வாழ்க்கையில் நீ ஒரு யுத்தத்தை சந்திக்க போகிறாய்" என்று... எங்கய்யா அந்த யுத்தம்??? 😂😂

இவிங்களோட கம்பேர் பண்ணும்போது சீமான், திருமாவளவன் மாதிரி ஆளுங்கல்லாம் பரவால்லனு தோனுது. ஏன்னா அவங்கல்லாம் ஜாதிப் பிரச்சினையை வியாபாரம் பண்ணலங்கறது குறிப்பிடத்தக்கது!

கடைசியா என்ன சொல்றோம்னா...
பெற்று வளர்த்த தந்தையையே 15 வருடங்களாக ஒதுக்கி வைத்து, பேசாமல் இருக்கும் மகனிடம் ஒரு காரணம் இருக்கிறது என்றால்? தீண்டாமையைக் கடைபிடித்து ஒதுக்கி வைத்த தமிழர்களிடம் அதற்கான காரணம் இருக்குமா? இருக்காதா? என்பதை அவர்களின் சிந்தனைக்கே விடுகிறோம்... அடுத்த படத்துல அதையும் டச் பண்ணுங்கப்பா.

தமிழ்நாட்டில் தீண்டாமை நடந்தது என்பதைச் சொல்லும் மாரிசெல்வராஜ் போன்ற அரைவேக்காட்டு இயக்குனர்களுக்கு, அதற்கான காரணத்தையும் ஆராய்ந்து சொல்லும் துணிச்சல் இருக்கிறதா? இருந்தால் அதையும் சொல்லலாமே...

But இனிமேல் ஜாதிப் பிரச்சினையை பற்றி படம் பண்ற எல்லாரும் தாழ்த்தப்பட்டவன், பட்டியல்இனம்-னு மொத்தமா பேசுற மாதிரி டையலாக் வைக்காம, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தீண்டாமைக்கு ஆளானார்களோ?... எந்த ஜாதிப் பெயரை சொல்லி தமிழ்நாட்டு மக்கள் கேவலமா திட்டுவாங்களோ?.. அதை அப்படியே டயலாக்ல வையுங்க... நீங்கதான் மன்னர் பரம்பரையாச்சே எதுக்கு எல்லா ஜாதியினரையும் கூட்டு சேர்க்குறீங்க??? உங்களைப் பற்றி மட்டும் படம் எடுத்து வரலாற்று புத்தகத்துல இடம்பெற்று சாதனை பண்ணிக்கோங்க... யாரும் தடுக்க மாட்டாங்க!

Final Touch...
புதுசா கதை எழுதுற திறமை இல்லேன்னா தமன்னா நடிச்ச Webseries மாதிரி எதையாவது காட்டி சம்பாதிங்கய்யா! அதுக்துத்தான் கதையும் இல்ல சென்சாரும் இல்லையே... தமிழ் சினிமாவை ஏன்யா கெடுக்குறீங்க? ஏற்கெனவே தியேட்டர் எல்லாம் இழுத்து மூடிட்டு எல்லாரும் OTT பக்கம் போய்ட்டாங்க... நீங்க பண்ற அலப்பரையில மக்கள் மொத்தமா சினிமாவையே வெறுத்துடுவாங்க போலருக்கே... இனிமேலாச்சும் உருப்புடுற மாதிரி படம் பண்ணுங்க. இயல்பு வாழ்க்கை வெறுத்துப்போயி என்டர்டெயின்மென்ட் பண்ணத்தான் மக்கள் தியேட்டருக்கு வர்றாங்க... அங்கேயும் இயல்பு வாழ்க்கையை காட்டிட்டு இருந்தா ஊத்தி மூடிட்டு போய்டுவாங்க!!

- #FilmicIndia | #மாமன்னன் | #விமர்சனம் #உதயநிதி #பகத்பாசில் #கீர்த்திசுரேஷ்
#வடிவேலு
In: Movie Reviews  Replies: 3  Views: 128

Recommended Content

Welcome:

Post your free thoughts on FiLMiC

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

RANDOM ADS CONTAINER

SPONSORED CONTENT